???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த சர்ச்சைக்குரிய தீர்மானம்: காங்கிரஸ் விளக்கம்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  21:51:59 IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி. வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய நிர்வாகிகள், நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் எனவும், உள்ளூர் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனைதொடர்ந்து, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதாக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வு குறித்து விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அப்படி, எந்த தீர்மானமும் முன்மொழியப்படவோ, வழிமொழியப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை.

இதுகுறித்து விசாரித்துப் பார்த்ததில், இக்கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் தாங்கள் சில தீர்மானங்கள் உள்ளடங்கிய நகலை விநியோகம் செய்துள்ளீர்கள் என்று அறிகிறேன். நடந்த கூட்டம், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மட்டும் நடத்தும் கூட்டம் அல்ல. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கூட்டம். தீர்மானங்களை இறுதி செய்வதற்கு முன்பு மற்ற இரு மாவட்டத் தலைவர்களுடன் நீங்கள் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. அதேபோல, மாநிலத் தலைவருக்கோ, செயல்தலைவர் என்ற முறையில் எனக்கோ, திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

மேலும், தீர்மானத்தை நடைபெற்றக் கூட்டத்தில் விளக்கவும், வாசிக்கவும், தெரியப்படுத்தவும் இல்லை. இது கட்சி விதிகளுக்குப் புறம்பானது. எனவே, தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...