???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   21 , 2020  21:32:52 IST

இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால் அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் நீட்சியாக டிரம்பின் வருகை இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா எச்சரித்துள்ளார்

இது தொடர்பாக ஆனந்த் சர்மா கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவை காங்கிரஸ் புரிந்து கொள்வதுடன், அதை ஆதரிக்கவும் செய்கிறது. நட்புறவு மற்றும் ராணுவம், பொருளாதாரம், அணுசக்தி, விண்வெளி, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விவகாரங்களில் டிரம்பின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இந்த பயணத்தின்போது இறையாண்மை, சுயமரியாதை, தேசிய நலன் ஆகிய மூன்றையும் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஆமதாபாத்தில் நடைபெறும் ‘நமஸ்தே இந்தியா’ நிகழ்ச்சி குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், ‘மற்றொரு நாட்டு தேர்தலில் நாம் ஒருபோதும் பங்கேற்பதில்லை. ஆனால் அமெரிக்காவில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் இந்த தவறு நடந்துள்ளது. எனவே பிரதமர் மோடி கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் நீட்சியாக டிரம்பின் வருகை இருக்கக்கூடாது’ என்று எச்சரித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...