???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

14 மாநிலங்களில் பூஜ்ஜியம் – எதிர்கட்சி வாய்ப்பையும் இழந்த காங்கிரஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   24 , 2019  02:44:08 IST


Andhimazhai Image

17-வது மக்களவைத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, 14 மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றிப்பெறாததோடு, எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறது.

நடந்து முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டுமே 302 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ், அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

14 மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிப்பெறாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 9 மாநிலங்களில் வெறும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று, காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் தனது இருப்பை உறுதிசெய்திருக்கிறது.

ஆறுதலாக கேரளத்தில் 15 தொகுதிகளையும், தமிழகம் – புதுவையில் 8 தொகுதிளையும் காங்கிரஸ் கட்சி தக்கவைத்திருக்கிறது.

இதில் முக்கிய சிக்கலாக பார்க்கப்படுவது, வலிமையான எதிர்கட்சி இம்முறையும் அமைய வாய்ப்பில்லாமல் போனதுதான். எதிர்கட்சியாக செயல்பட குறைந்தது 55 இடங்களில் வெற்றிப்பெறுவது அவசியம். 52 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் காங்கிரஸ், எதிர்கட்சி அந்தஸ்தத்தையும் இழந்தது. காங்கிரஸ் மட்டுமின்றி மத்தியில் எந்த கட்சியாலும் இம்முறை எதிர்கட்சியாக செயல்பட முடியாது என்பது ஒருமுக்கிய பின்னடைவு.

காங்கிரஸ் முழுவதுமாக தோல்வியடைந்த மாநிலங்கள்:

ஆந்திர பிரதேசம்
அருணாசல பிரதேசம்
டெல்லி
குஜராத்
ஹரியானா
ஹிமாச்சல பிரதேசம்
ஜம்மு – காஷ்மீர்
மணிப்பூர்
மிசோரம்
ஒடிசா
ராஜஸ்தான்
சிக்கிம்
திரிபுரா
உத்தரகாண்ட்

இவை மட்டுமின்றி, யூனியன் பிரதேசமான அந்தமான் - நிகோபர், சண்டிகர், தாதர் நகர், ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் முழுவதுமாக தோல்வியடைந்திருக்கிறது.


English Summary
Congress gets Zero seats in 14 states

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...