???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழைச் சிறுமைப்படுத்தலாமா? -கே.எஸ். அழகிரி கண்டன அறிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   26 , 2019  08:06:34 IST


Andhimazhai Image

12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை சிறுமைப்படுத்துகிற வகையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை எந்தெந்த வகைகளில் மக்களிடையே திணிப்பது என்கிற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்த பிறகு, மத்திய பா.ஜ.க. அரசு தனது முடிவை மாற்றி பின்வாங்கிக் கொண்டது. இத்தகைய போக்கு தொடர் கதையாக இருந்து வருகிறது.

 

சமீபத்தில் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பிற்கு வெளியிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக மக்களியே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய வரலாற்று திரிபு வாதங்களை மத்திய அரசுக்கு பின்னால் இருந்து ஆர்.எஸ்.எஸ். சனாதன பரிவாரங்கள் செய்து வருகிறார்கள். 

 

இந்த பாடப் புத்தகங்களைத் தயாரிக்கிற பணியில் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் வகுப்புவாத உணர்வு கொண்ட கல்வியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் சமஸ்கிருத மொழியை திணித்து தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத கலாச்சார படையெடுப்பை பா.ஜ.க. நிகழ்த்தி வருகிறது.

 

சமஸ்கிருத மொழியை அறிந்து கொள்ளாமல் இந்தியாவின் பண்பாட்டை அறிந்து கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் 30 சதவிகித வார்த்தைகள் சமஸ்கிருத கலப்போடு இருப்பதால் அனைத்து மொழிகளையும் விட இம்மொழியே தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்தின் மூலம் சமஸ்கிருத திணிப்பு எங்கே, எவரால், எப்படித் திணிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் என வேறுபட்ட நாடாக இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய ஒற்றுமையை சீர்குலைத்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் சமஸ்கிருத, இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரே நாடு, ஒரே தலைமை, ஒரே அரசு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஒற்றை ஆட்சியை நிறுவுவதற்கு பா.ஜ.க. அடித்தளம் அமைத்து வருகிறது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்தி வருகிறது.

 

நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிற வகையில் மத்திய பாட திட்டத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டுப் பெருமையை சிறுமைப்படுத்துகிற வகையில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற பெரும்புகழ் தமிழர்களுக்கு உண்டு. அத்தகைய பெருமைக்குரிய தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப்பிடுகிற வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...