???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் முடிவு

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2019  02:34:51 IST

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.
 
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் ராகுல் காந்தியை சந்தித்து ஆம் ஆத்மி உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். 
 
ஆரம்பம் முதற்கொண்டே, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை.
 
இருப்பினும் டெல்லி விவகாரத்தை கையாளுவதற்காகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி 4 சீட்டுகளில் ஆம் ஆத்மியும், 3 சீட்டுகளில் காங்கிரசும் போட்டியிடும் என்ற முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.  
 
இந்த நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...