???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத் மாநிலங்களவை தேர்தல் : நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை -அகமது பட்டேல் வெற்றி.

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2017  03:27:09 IST


Andhimazhai Image

குஜராத்தில் நேற்று ராஜ்யசபா தேர்தல் நடந்தது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. பரபரப்பான இந்தத் தேர்தலில் சோனியாவின் அரசியல் ஆலோசகரும் , காங்கிரஸ் வேட்பாளருமான அகமது பட்டேல் வெற்றி பெற்றார். 

 

குஜராத் மாநிலத்தில் மூன்று இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. குஜராத் சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின்  எண்ணிக்கை 182. ஆறு எம்எல்ஏக்கள் காங்கிரசிலிருந்து விலகிவிட்டதால் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 176 ஆனது.

 

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 60 எம்எல்ஏக்கள். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா உட்பட  பத்து  எம்எல்ஏக்கள்  அஹமது படேலுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். ஆறு  எம்எல்ஏக்கள் காங்கிரசிலிருந்து விலகிவிட்டனர். எனவே மீதமிருக்கும் 44 எம்எல்ஏக்கள் வாக்களித்தால்தான் அஹமது படேல் வெற்றி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழ்நிலை.

 

முன்னதாக ரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம் எல் ஏக்களிடம் உருக்கமாகக் கண் கலங்கியபடி வேண்டுகோள் விடுத்த அஹமது படேல், தான் ஏதாவது தவறாக நடந்திருந்தால் மன்னிக்கும் படி பேசியுள்ளார். பின்னர் எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர்.  

 

வாக்குப்பதிவு காலை 9 மணிக்குத் துவங்கியது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போலோபாய் கோகில் மற்றும் ராக்விஜிபாய் படேல் ஆகியோர், கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததோடு அல்லாமல் தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.க தலைவரிடம் காண்பித்தனர்.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரின் வாக்குகளைச் செல்லாதென அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

 

இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், தர்மேந்த்ர பிரதான் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.சுரஜ்வலா உள்ளிட்ட  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிட்டனர்.

 

எனவே வாக்குப்பதிவின்போது பதிவு செய்யப்பட்ட முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதமானது.

 

வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பின்னர்,  கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

பின்னர் நள்ளிரவு 1:35 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது  பட்டேல் வெற்றிக்குத் தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரசைச் சேர்ந்த 43 எம் எல் ஏக்கள்  அஹமது படேலுக்கு வாக்களித்துள்ளனர். ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சோட்டு வசவாவும் அஹமது படேலுக்கு வாக்களித்ததாக நம்பப்படுகிறது. இதனால் அஹமது படேலின் வெற்றி உறுதியானது.

  

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 46 வாக்குகளும் மற்றும் ஸ்மிரிதி இரானி 46 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து, அகமது பட்டேலுக்கு நெருக்கடி கொடுத்த, பா.ஜ.க.வின் சார்பில் போட்டியிட்ட பல்வந்த் சிங் ராஜ்புத்துக்கு 38 வாக்குகளும் கிடைத்தது. இரண்டு வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

 

அகமது பட்டேலின் வெற்றி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய வெற்றி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அகமது பட்டேல் ‘வாய்மையே வெல்லும்’ என்றும், இந்த வெற்றி காங்கிரஸின் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பா.ஜ.க.வால் விலைக்கு வாங்க முடியும் ஆனால் உண்மையை விலைக்கு வாங்க  முடியாதென ப.சிதம்பரம் கூறியுள்ளார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...