???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  23:55:00 IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிஷ்யையாக இருந்தபோது, நடந்த சம்பவங்களை கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற இளம்பெண் சமூகவலைதளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் நித்யானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்பட அவர் மீதான பல்வேறு புகார்கள் தொடர்பாக சமூகவலைதளத்தில் விரிவாக எழுதிவருகிறார்.

அண்மையில் சாரா வெளியிட்ட வீடியோவில், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து தன்னை வெளியேறத் தூண்டியது என்ன என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். ஸ்ரீ நித்திய ஸ்வரூப்ப பிரியானந்தா என்ற பெயருடன் பிடதியில் குருகுல ஆச்சார்யாவாக பணியாற்றிய சாரா, குழந்தைகளிடம் தான் நெருங்கிப் பழங்கியதாக தெரிவித்துள்ளார். இரண்டு சிறுவர்கள் அழுதுகொண்டே, நித்யானந்தாவின் செயல்கள் அனைத்தும் பொய் என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் விரிவாக விசாரித்தபோது, ஆசிரமத்தில் உள்ளவர்களால் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், சிறை போன்ற அறைகளில் அடைத்து வைக்கப்படுவதாகவும் தெரியவந்ததாக சாரா கூறுகிறார். குருகுல ஆசிரியர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது தான் சிறுவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்ற கொடுமை அங்கிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டுமென அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதை வெளியே கூறுவது குரு துரோகம் எனவும் ஆசிரியர்கள் மிரட்டிவைத்திருப்பதாக சாரா கூறுகிறார்.

இதுகுறித்த ஆசிரமத்தின் மூத்த நிர்வாகிகளான நித்யானந்தா, ரஞ்சிதாவிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறுகிறார். நித்யானந்தாவால் தானும் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்ததாகவும், அவரது உண்மை முகம் தெரிந்ததால் தாம் கனடா கிளம்பிவந்துவிட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் துன்புறுத்தப்படும் சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டுமென அந்த வீடியோவில் சாரா கோரிக்கை விடுத்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...