???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகையை கேட்டு போனில் தொல்லை: இயக்குநர் மீது போலீசில் புகார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   10 , 2020  22:08:26 IST

‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பூபாலன் என்பவர் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, “கடந்த 25 நாட்களுக்கு முன்பு ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அசோக் செல்வன் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் வாணி போஜன், மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில், மீரோ, அசோக் செல்வனுக்கு தன் செல்போன் எண்ணைக் கொடுப்பார். அந்த எண் நான் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் செல்போன் எண் ஆகும்.

படத்தைப் பார்த்தவர்கள் உண்மையில் வாணி போஜனின் செல்போன் எண் என எண்ணிக் கொண்டு தினமும் எனக்கு போன் செய்கிறார்கள். தினமும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் போன் செய்து, வாணி போஜன் இருக்கிறாரா, நான் அவரிடம் பேச வேண்டும் என தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதனால் என் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே எனது செல்போன் எண்ணை ‘ஓ மை கடவுளே’ படத்தில் பயன்படுத்திய, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் தமக்கு வாணி போஜனை கேட்டு போன் செய்யும் பிரச்னையில் இருந்து விடுவிக்கவும் ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...