அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   22 , 2021  09:23:43 IST

மீன் பிடிக்க சென்று உயிரிழந்த, புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
முதலமைச்சரி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்...
 
'புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த ஜன.18 அன்று மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அந்தோணிராஜ் என்பவரின் மகன் மெசியா, வெள்ளைச்சாமி என்பவரின் மகன் நாகராஜ், செல்லம் என்பவரின் மகன் செந்தில்குமார் மற்றும் நிக்சன்டார்வின் என்பவரின் மகன் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
 
இந்த மீனவர்கள் ஜன.19 அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று அறிந்தவுடன், எனது உத்தரவின்பேரில் இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.
 
இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு/ அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிளேன்.
 
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்." என கூறப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...