செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பிர்மிங்கமில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மந்தனா. இது இந்திய மகளிர் டி20 கிரிகெட்டில் இது விரைவான அரை சதமாகும். ஜெமிமா ரோட்ரிகஸ் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது இந்திய அணி . இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 86 எண்களை எடுத்திருந்தது. அடுத்த பத்து ஓவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். டேனியல் வயட்டின் 27 பந்தில் 35 ரன்களும், நாட் ஸ்கீவரின் 43 பந்துகளில் 41 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி பேட்டிக்கு முன்னேறியுள்ளது.