???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   30 , 2020  23:42:48 IST

144 தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. இந்த நேரத்தில் சென்னை நகருக்குள்ளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கு 3 முக்கியமான காரணங்களுக்காக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் திருமணத்துக்கும் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு மட்டும் இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதர தேவைகளுக்கு அனுமதி கேட்டால் அனுமதி கிடைக்காது.

மேலும் இந்த 3 முக்கிய காரணங்களுக்காக செல்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்தும் விண்ணப்ப மனுக்களை கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் நேரில் கமிஷனர் அலுவலகம் வந்து காத்து கிடக்க தேவை இல்லை. அவர்களது கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், அவர்கள் நேரில் அழைக்கப்படுவார்கள்.

நேரில் அழைக்கப்படும்போது, விண்ணப்பித்தவர்கள் முதலில் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அடுத்து தாங்கள் வெளி ஊர் செல்வதற்கான காரணம் சம்பந்தப்பட்ட ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்கு செல்பவர்கள் திருமண பத்திரிகையை காட்டலாம். மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், உரிய மருத்துவரின் பரிந்துரை சீட்டை காட்ட வேண்டும்.

இதுவரை 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள், அந்த மாநில போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவார்கள். கமிஷனர் அலுவலகத்தில், விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள், உரிய இடைவெளி விட்டு வரிசையில் நின்றுதான் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...