அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் சூரியின் உணவகங்களில் வணிகவரித்துறை சோதனை

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   21 , 2022  10:17:54 IST

மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி.இவர் மதுரையில் அம்மன் என்ற உணவகங்களை நடத்தி வருகிறார். இந்த உணவங்கள் மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
 
இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சோதனை நடந்துள்ளது. மேலும் உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்மன் உணவகத்தின் மீதான புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...