???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் 0 சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு! 0 பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு 0 ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை! 0 திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார்! 0 இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 0 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்! 0 விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் 0 ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு 0 ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் 0 தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு 0 கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்! 0 பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 0 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' 0 உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தமிழில் பேசக்கூடாது' - கொழும்பு உணவக அறிவிப்பால் சர்ச்சை

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   30 , 2019  04:59:45 IST

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில், பணியாளர்கள் தமிழில் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த உணவகத்தில், "கட்டாயமாக பணியாளர்கள் தமிழில் பேசக்கூடாது. சிங்களம், ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டுமென பதாகையில் அறிவிப்பு செய்யப்பட்டது".
 
உணவகத்தில் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், தமிழில் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஏன் என அந்த உணவகம் விளக்கம் அளித்திருக்கிறது.
 
அந்த விளக்கத்தில், "மக்கள் தவறாக புரிந்துகொள்ளும் வகையில், தமிழில் பேசக்கூடாது என்ற பதாகையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஊழியர்கள் தமிழில் பேசுவது வாடிக்கையாளர்களை கேலி செய்வதைபோல் உள்ளதாக புகார் வந்தது. வாடிக்கையாளர்களின் இந்த புகார் தொடர்பில் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பலனளிக்கவில்லை என்பதால் பணம் செலுத்துமிடத்தில் அந்த பதாகையை வைத்தோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழில் பேசக்கூடாது என்கிற அறிவிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...