![]() |
கொழும்பு துறைமுக விவகாரத்தில் சீனா அழுத்தம் தரவில்லை - இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்தனPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 11 , 2021 11:30:50 IST
![]() கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டம் தொடர்பில் இலங்கைக்கு சீனா எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய மேம்பாட்டிற்கு இந்தியா மற்றும் ஜப்பான் பங்களிப்பு செய்வதாக கடந்த 2019-இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அதானி குழுமம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் முதலீடு செய்வதாக இருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு இலங்கையில் எதிர்ப்பு எழுந்ததால் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய திட்டத்தில் இந்தியா, ஜப்பான் சேர்க்கப்படாது என இலங்கை அரசு அறிவித்தது. இதன் பின்னணியில் சீனாவின் நெருக்கடி இருக்கலாமென கூறப்பட்ட நிலையில், அதனை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார். மேலும், இந்திய - இலங்கை விவகாரங்களில் சீனா தலையிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனைய திட்டத்தில் இந்தியா சேர்க்கப்படலாமென கூறப்படுகிறது.
|
|