???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  20:32:56 IST

நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-க்குள் முடிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ‘கொரோனா நோய்த்தொற்றையொட்டி 2020௨1-ம் கல்வியாண்டில் முதல் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கால அட்டவணையை நிபுணர் குழு தயாரித்தது. அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்றுக்கொண்டு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
 
அதன்படி, முதல் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ந் தேதிக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வகுப்புகள் 2-ந்தேதி அல்லது முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதுதவிர, 2020-21-ம் கல்வியாண்டுக்கான கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வியாண்டு தொடங்குவதற்கான தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் விடுமுறைகளை குறைக்க வேண்டும் என்றும், அப்படி செய்யும்போது இந்த ‘பேட்ச்’ மாணவர்கள் சரியான நேரத்தில் பட்டத்தை பெறுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...