???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகனின் காதலியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை! ஏரிக்குள் கிடைத்த உடலின் மர்மம் விலகியது!

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  05:31:30 IST


Andhimazhai Image

கடந்த ஞாயிற்றுகிழமை பெரும்பாக்கம்  ஏரியில் ஆண் உடல் ஒன்று மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் இதே ஏரியில் இன்னொரு உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அது யாரென்றும் தெரியாமல் மர்மமாகவே இருந்தது.  இந்நிலையில் அடுத்ததாக கிடைத்த ஆண் உடல் போலீசுக்கு மேலும் குடைச்சலை அதிகப்படுத்தியது.

 

இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். சிட்லபாக்கத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஹென்றி ஜெயசிங் என்பவரின் உடல்தான் அது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயசிங் பயணித்த இருசக்கர வாகனம் டாஸ்மாக் கடையின் வாசலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் சோதித்தனர்.  அதிகமாக குடித்திருந்த ஜெயசிங் ஆட்டோவில் ஏற்றப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.  ஆட்டோவின்  பதிவு எண்ணை வைத்து ஆட்டோவின் உரிமையாளரான அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

 

அப்போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சேவியர் அருளும், அவரின் நண்பர் விஷ்ணு என்பவரும் டாஸ்மாக்கில்  மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது   ஜெயசிங்கை பார்த்துள்ளனர். அவர் தங்க சங்கிலி அணிந்திருப்பதை நோட்டமிட்ட இவருவரும், தங்களோடு சேர்ந்து மது அருந்துமாறு அழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மூவரும் சேர்ந்து பெரும்பாக்கம் ஏரியின் கரையில் மது அருந்தியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து அருளும் விஷ்ணுவும்  ஜெயசிங்கை தாக்கி கொன்றுவிட்டு அவரது தங்கசங்கிலியை எடுத்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை ஏரியில் வீசிவிட்டனர். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விசாரணையின்போதுதான் ஏற்கெனவே கிடைத்த உடலைப் பற்றிய மர்மமும் விலகியதாக போலீஸார் கூறுகின்றனர். அது ஒரு பெண்ணின் உடல். கொலை செய்தது இதே ஆட்டோ ஓட்டுநர் அருள்தான். இவரது மகன் விஜயை  திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் ஓர் யாருமற்ற ஆனாதை. இந்த காதலுக்கு அருள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  துணிக்கடையில் வேலை செய்து வரும் இந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று அருள் தனது மகனிடம் கூறியிருக்கிறார். 

 

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை விஜய்  ஏரிக்கரைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் இணைந்து கயிற்றால் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். மேலும் அவரது உடலை  அதே ஏரியில் வீசியுள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கொலை செய்தபிறகு கண்டுபிடிக்கப்படாமல் இருந்த துணிச்சலில்தான் இன்னொரு கொலையையும் செய்து மாட்டி உள்ளனர்.

 

கொடூரமாக இரு கொலைகளை செய்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் அருள் மற்றும் அவரது மகனை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...