???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜகவின் கோட்டையாக இருந்த பெல்லாரியை கைப்பற்றிய காங்கிரஸ்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2018  06:13:47 IST

பெல்லாரி மக்களவை தொகுதியை 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நடந்த தேர்தல்களில் வென்று தனது கோட்டையாக வைத்திருந்த பாஜக, இம்முறை அங்கு படுதோல்வி அடைந்துள்ளது.
 
கர்நாடகாவில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள், இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஷிவமோகா பாராளுமன்ற தொகுதியில் மட்டும் பாஜக ஆறுதல் வெற்றியை அடைந்துள்ளது. மற்ற தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியை விட பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது எதுவென்றால், பெல்லாரி மற்றும் ஜமகண்டி தொகுதியில் ஏற்பட்ட தோல்விதான்.
 
வட கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் அதிகம் உள்ள இந்த பகுதியில் ஏற்பட்ட தோல்வியை பாஜக எதிர்பார்க்காதது. 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்த 3 பாராளுமன்ற தேர்தலில் வென்று பெல்லாரியை தனது கோட்டையாக வைத்திருந்த பாஜக, இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையிலேயே களத்தில் இருந்தது. ஆனால், மக்களின் கொடுத்த தீர்ப்போ வேறு மாதிரி ஆகிவிட்டது.
 
பெல்லாரியில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது அபார வெற்றி. சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ் உகரப்பா, பாஜவின் ஷாந்தாவை தோற்கடித்துள்ளார்.
 
தாதுவளம் நிறைந்த பெல்லாரி தொகுதியில் பாஜகவை சேர்ந்த சுரங்க அதிபர்களான ரெட்டி சகோதரர்களே முழுக்க முழுக்க தேர்தல் பணியாற்றினர். எடியூராப்பா 54 மணி நேர முதல்வராக இருந்த போதும், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ரெட்டி சகோதர்கள் ஈடுபட்டதாக புகார் உண்டு.
 
நீண்ட காலமாக இருட்டில் இருந்த பெல்லாரிக்கு வெளிச்சம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியையும், பாஜகவுக்கு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...