???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   24 , 2019  23:26:08 IST

''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பிரதமராகிய தாங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அதற்கு ஆவண செய்ய வேண்டும். இதற்கான உத்தவை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு நீங்கள் உத்தர விட வேண்டும்.

கர்நாடகாவின் நடவடிக்கை காவிரி விவகாரத்தில் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை.

மேகதாது அணை அல்லது அதனைப் போன்ற எதுவும் கர்நாடகத்தில் காவிரி ஆறு வரும் பாதையில் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...