செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
Posted : வியாழக்கிழமை, ஜுன் 30 , 2022 08:19:52 IST
ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன. இதைத்தொடர்ந்து அந்தப் படங்களின் நாயகனான சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரையுலகினர் பெரிதாகக் கருதும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அது ஆங்கில படங்களுக்கான விருதாக இருந்தாலும், உலக சினிமா துறையினர் ஆஸ்கார் மீது பெரும் மரியாதை வைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
|