![]() |
"காவிரி பிரச்னையின் கதாநாயகன் தி.மு.க. தான்": முதலமைச்சர்Posted : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 03 , 2018 23:16:13 IST
காவிரி பிரச்சனை இத்தனை ஆண்டுகளாக நீடிக்க தி.மு.க.வே காரணம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
போராட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பிலும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதிமுகவின் அறவழி போராட்டம் தொடரும். காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிற கட்சிகள் மக்களிடம் தவறான கருத்துகளை திணிக்கப் பார்ப்பதாக தெரிவித்தார்.
|
|