???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும்: முதலமைச்சர்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:40:49 IST

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின் பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

"இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது.

அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத் தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றும் கருதுகிறேன்.

சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

ஏற்கனவே 1956-ம் ஆண்டு, சீன நாட்டு பிரதமர் சூ என் லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறப்பட்டு உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...