???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16 0 ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா? 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  23:11:25 IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, தொலைநோக்கு பார்வை கொண்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் வானூர்தி தயாரிப்பு, ஊடகம், காப்பீடு, அனிமேஷன், வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாரத் மாலா திட்டத்தின் 2-வது கட்டத்தின் மூலம் மாநில அரசின் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ள அவர், இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் எனவும், கோதாவரி, காவேரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...