அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   01 , 2022  17:17:09 IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரத்திற்கு இன்று சென்றுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு அக்டோபர் 3-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, 'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி கே.ராஜன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கேரள மாநில உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மந்திரி ஜி.ஆர்.அணில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்றுகின்றனர்.




 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...