அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர்

Posted : புதன்கிழமை,   ஜுலை   08 , 2020  07:45:50 IST

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 127 கோடி ரூபாய் மதிப்பில், 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதியுடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்பை தடுக்கும் நோக்கில் இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

தமிழகத்தில் 57.89% பேர் குணமடைந்து உள்ளதாகவும், சென்னையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு மூலம் படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது என்றார்.

கொரோனா நோய் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. மக்கள்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழுக்க முழுக்க மக்கள் கையில்தான் இருக்கிறது. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த முடியும்’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சமூக பரவல் இருக்கிறதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும், சமூக பரவல் இருந்தால் நீங்கள் யாரும் இங்கு இருக்க முடியாது. வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டது. நோய் பரவலையும் தடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். எனவே, ஊரடங்கு மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...