???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர்!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  22:46:13 IST

13 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். இந்த பயணத்தில் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 13 நாட்கள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று துபாயில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து தனது வெளிநாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு துபாயில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி, காலை 3 மணியளவில் சென்னை திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

விமானத்தில் வந்து இறங்கியதும் முதலமைச்சர் பழனிசாமியை முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள் பூங்கொத்துகள் கொடுத்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமாரும் வரவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் பிறந்து கல்வி கற்று வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் மீண்டும் தாயகத்துக்கு திரும்பி முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வெளிநாட்டினரை சந்திக்கும் போது அவர்களது உடையில் இருந்தால் மட்டுமே முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றார்.

வெளிநாடுகளில் தமிழர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழகத்தில் மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். பருவமழை பொய்க்கும் காலங்களில் இருக்கும் நீரை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து அறிய அடுத்த கட்டமாக இஸ்ரேல் சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

புதிய முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பு பெருகி தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் எனக்கூறிவிட்டு முதலமைச்சர் பழனிசாமி அங்கிருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச்சென்றார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...