???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  23:16:45 IST

உடல்நலக்குறைவு, விபத்தில் இறந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் நிதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'சென்னை தரமணி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த ப.பிரபு, பாதுகாப்பு சென்னை போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜோ.ஆரோக்கியநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ரா.பார்த்தசாரதி, காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலாஜி மற்றும் செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ந.ரமேஷ்பாபு ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த கோவிந்தசாமி சாலை விபத்தில் இறந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவர்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் இறந்த 25 போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் 25 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...