அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெயலலிதா இல்லாத காரணத்தால், எங்களை பயமுறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி: முதல்வர்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   31 , 2018  00:37:48 IST

ஜெயலலிதா இல்லாத காரணத்தினால், எங்களை பயமுறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட புகார் பொய்யானது, வழக்கை சொந்தமாக வாதாடி தடை பெற்றுள்ளேன். திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை மறைப்பதற்காக, எங்கள் மீது வழக்கு தொடருகிறார்கள். 
 
ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே, எங்களை பயமுறுத்தி, ஆளும் அதிமுக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். கட்சி உடையும், ஆட்சி கலையும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை. 
 
அதிமுக நிர்வாகிகள் சிலர் பாதை மாறி சென்றுள்ளனர், அவர்கள் திரும்பி வர வேண்டும். டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால், அதிமுகவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. 
 
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினர் கருத்தையும் கேட்டு பின்னர் முடிவுசெய்யப்படும். பட்டாசு வழக்கில், தமிழ்நாடு அரசின் மனுவின்படியே உச்சநீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது என அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...