தெலங்கானா ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிகிராமம் இல்லத்துக்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.
தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, கர்நாடகா அணை கட்டக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.