???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து அமைதி காக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  21:46:32 IST

அயோத்தி தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை அரசு பேணிக் காத்து வருகிறது.சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகின்றது. அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து, தற்போது உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை இன்று (09.11.2019) வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று (09.11.2019) வழங்கவுள்ள நிலையில், தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...