???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  22:50:09 IST

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், விழாவில் பேசியதாவது:-

மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஜெயலலிதாவின் அரசு அதிக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழக அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நான் 2011-ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்துவைத்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த ஆட்சி 10 நாள் தாக்குப்பிடிக்குமா? ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா? என்று சொன்னார்கள். 2 ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு முழு காரணம் மக்களும், அதிகாரிகளும் தான். உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.

வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டுமனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவித் திட்டத்தை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதன்மூலம், புதிதாக தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, ஜெயலலிதா காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை தற்பொழுது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...