???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கருணாநிதி மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  09:20:07 IST

திமுக தலைவர் கருணாநிதி மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கருணாநிதி இன்று காலமானார் என்ற செய்தியை கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
 
கருணாநிதி அவர்கள் 1969ம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்று பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தனது முத்திரையை பதித்தவர்.
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு ஆகும். அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தனது இரங்கல் குறிப்பில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...