அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீட் விலக்கு மசோதா: ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  20:17:29 IST

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை விலக்கி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்கு உடனே அனுப்பப்பட்டது. இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.
 
நீட் தேர்வு சட்ட மசோதா கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தார். சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த ஒருசில தினங்களிலேயே ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பின் புதிய ஆளுநராக ஆர். என் ரவி பதவியேற்றார். பதவியேற்ற பின் நீட் விலக்கு மசோதா குறித்து முதன் முறையாக முதலமைச்சர், ஆளுநரை சந்தித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் பொழுது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் குறித்து விளக்கம் பெறப்பட்டதாகவும், மேலும், கொரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனி செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...