???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   05 , 2020  00:12:23 IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாதம்தோறும் தமிழகத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார், இதற்கு முன்பாக மார்ச் 31, மே மாதம் 4, ஜூன் 2 ஆகிய தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து கொரோனா நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். 5 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

இதில் தமிழக அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் விளக்கியதாக கூறப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...