???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   23 , 2020  21:03:57 IST

இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்தியாவின் 12,000 ஆண்டு பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்காக,மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் கலாசார ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் குழுவில் தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதிநிதி கூட கலாசார ஆய்வு குழுவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ்நாடு என்பது பழமைவாய்ந்த திராவிட கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் வாசஸ்தலம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அதற்கு சான்றாக கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தொல் பொருட்கள் கிடைக்கப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.
 
எனவே இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, கலாசார ஆய்வுக் குழுவில் தமிழக அறிஞர்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் எனவும், இதில் உடனடியாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...