???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   08 , 2020  22:03:24 IST

இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில்,

மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நடக்கும் நியமனங்களில் ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்கிறது. ஆனாலும் ஓ.பி.சி. பிரிவில் கிரிமிலேயர் வகைக்கு உட்பட்டவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது.

ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவுக்கு வராதவர்கள் என்பதை கணிக்க 6 தகுதிகள் கணக்கிடப்படுகின்றன. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதற்கான அளவுகோலில் ஒன்று, வருமான வரம்பாகும்.

அந்தப் பிரிவில் வருபவரின் வருமான வரம்பு, ஆண்டொன்றுக்கு ரூ.1 லட்சம் என்று 1993-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து, வருமான வரம்பு ரூ.8 லட்சமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவினருக்கான தகுதியை நிர்ணயிப்பதில், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி, அதை திருத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இடஒதுக்கீடும், நலத் திட்டங்களைப் பெறும் கிரிமிலேயர் பிரிவினர் யார் என்பதை முடிவு செய்யும்போது, சம்பளமும், விவசாய வருமானமும் அவர்களின் வருவாயில் தற்போது சேர்க்கப்படுவதில்லை. இந்த இரண்டையும் பெற்றவர்களின்ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டால், பல தகுதியுள்ள ஓ.பி.சி.யினரை மத்திய அரசின் நலத் திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளை பெற முடியாமல் செய்துவிடும்.ள

எனவே கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் சம்பள வருவாய் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள கொள்கையே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தமிழக அரசை மாதிரியாக மத்திய அரசு கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து ஓ.பி.சி. பிரிவினரும் சம வாய்ப்பைப் பெறுவதோடு, முழு சமூகநீதியை அளிக்க முடியும்' என கூறப்பட்டுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...