அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கினார் முதலமைச்சர்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  12:34:55 IST

காவல் பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.  

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் தலையில் வெட்டுக்காயத்துடன் அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

நவல்பட்டு எல்லைப் பகுதியில் இருந்து ஆடுகளை ஏற்றி வந்த இரு சக்கர வாகனங்களை பூமிநாதன் துரத்தி வந்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியிருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் அவரது வீரதீரச் செயலைப் பாராட்டினார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, பூமிநாதனின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...