அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   24 , 2021  08:10:37 IST

 ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் கலைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயன்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டதால் "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக கோவையில் இரண்டு நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல் நாளில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிசாரத்தை தொடங்கினார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில், முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது, என கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் மீது ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசியல் லாபம் பெற முயல்வதாகவும் சாடினார். மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை கலைக்க, மு.க.ஸ்டாலின் முற்பட்டதாக குற்றம் சாட்டினார். அது ஈடேறாததால் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் ஆவேசமாக கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...