???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  22:52:25 IST

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

‘வோக்ஸ் வேகன்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹெர்பர்ட் டையஸ், ‘ஸ்கோடா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பெர்ன்ஹார்டு மையர், ‘மெர்சிடஸ் பென்ஸ்’ நிறுவன தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி கார் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்கஸ் டியூஸ்மன், ‘ஹோண்டா’ நிறுவனத்தின் தலைவர் டகாஹிரோ ஹச்சிகோ, ‘டொயோடோ’ நிறுவனத்தின் தலைவர் அக்கியோ டொயோடா, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஜிப்ரே, ‘லக்ஸ்ஜென் டயோயுவான்’ மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹூ ஹை சாங், ‘ஜாக்குவார் லேண்ட்ரோவர்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ரால்ப் டி. ஸ்பெத், ‘ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் செவர்லெட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மேரி டி.பர்ரா மற்றும் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் எலோன் மஸ்க் ஆகிய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...