அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   18 , 2021  11:10:21 IST

 முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது எந்தவொரு பணியையும் செய்யாமல், தற்போது அதிமுக செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை வேண்டுமென்றே விமர்சனம் செய்து வருவதாக சாடினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான பாதையில் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும், தமிழகத்தில் ஏழை மக்கள் இல்லாத நிலையை உருவாக்க அதிமுக அரசு போராடி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...