???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   16 , 2018  07:58:24 IST

அரசு சார்பில் கஜா புயலின் தாக்கத்தை சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். சேலம், ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ‘கஜா புயல் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். அதேபோல, புயல் காரணமாக படுகாயமடைந்தவர்கள்க்கு 1 லட்ச ரூபாயும், சிறிய அளவு காயமடைந்தவருகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்கப்படும்.
 
110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நாகையில் கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்களும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் தங்கி பணி செய்து வருகின்றனர். இதனால், புயல் பாதித்த இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.
 
அமைச்சர்கள், அதிகாரிகள் சேதம் குறித்து தெரியபடுத்தபட்ட‌ பின்னர் தான் மத்திய அரசிடம் நிவாரண நிதி குறித்து கேட்கப்படும். புயல் பாதித்த இடங்களுக்கு நானே நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். போர்க் கால அடிப்படையில் எல்லா இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...