???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   29 , 2020  11:10:50 IST

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 2 தனிக் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வெளிமாநிலங்களில் வேலை பார்த்துவந்த முறைசாரா தொழிலாளர்கள் நடந்தே தங்களது மாநிலங்களுக்கு பயணத்தைத் தொடங்கினர். அதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மாநிலங்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்கவும் மேலும் 2 தனிகுழுக்கள் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...