???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித் தொகை: முதல்வர் அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   11 , 2019  22:35:51 IST

தமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
சட்ட சபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.
 
மேலும் இந்த சிறப்பு உதவித்தொகை தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். இந்த சிறப்பு உதவித்தொகைக்காக 1,200 கோடி ரூபாய் 2018 - 19ம் ஆண்டின் துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர்  அறிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...