???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   18 , 2018  02:01:06 IST


Andhimazhai Image
பத்திரிகையாளர் சந்திப்பில் தன் கன்னத்தை தடவிய ஆளுநருக்கு பெண் பத்திரிகையாளர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆளுநர் மன்னிப்புக் கோரி உள்ளார்.
 
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பெண்களைத் தவறாக வழிநடத்த முனைந்ததாக அந்தக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பேசியதாக வெளியான ஆடியோவில் ஆளுநர் அளவிற்கு தனக்குச் செல்வாக்கு இருப்பதைப் பதிவு செய்திருந்ததை அடுத்து தமிழக ஆளுநர் மீதான குற்றச்சாட்டாக விவகாரம் உருவெடுத்தது. 
 
இந்த நிலையில் ஆளுநரே இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார். ஆனாலும் எதிர்கட்சிகள் ஆளுநர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்றும் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் புரோகித் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 
கடந்த அக்டோபரில் ஆளுநராக பதவியேற்ற பின், அவர் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாகத் தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் பதவியேற்று ஆறுமாதங்கள் ஆனதாலேயே சந்திப்பதாகவும் அடுத்த ஆறு மாதங்களில் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். 
 
செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாகப் கேள்விகள் கேட்கப்பட்டன. 
 
நடந்துமுடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன், ' செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் என் அனுமதியின்றி எனது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். 
 
அவர் செய்தது அவருக்கு வேண்டுமென்றால் தாத்தா என்கிற ரீதியில் செய்ததாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது தவறு. இப்போதும் எனது கன்னத்தை கழுவித் துடைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் செய்த செயலை என்னால் நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை. முன்பின் தெரியாத நபரை அதுவும் ஒரு பெண்ணிடம் அப்படி நடந்துகொள்வது ஏற்புடையதல்ல கவர்னர் அவர்களே' என்று எழுதியிருந்தார்.
 
ஆறுமாதமாகச் செய்தியாளர்களைச் சந்திக்காத ஆளுநர் இப்படியான சர்ச்சைகளுக்கு நடுவே செய்தியாளர்களைச் சந்தித்தது எதற்கு என்கிற கேள்வி ஒருபக்கம் உள்ள நிலையில், தமிழக ஆளுநரின் இந்தச் செயல் அவரை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த செயலுக்கு தி.மு.க எம்பி கனிமொழியும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
 
நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என தெரிவித்துள்ளார்.
 
அதுபோல் திமுக செயல்தலைவர் மு. க. ஸ்டாலின் ஆளுநரின் செயல் துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள சென்னை பத்திரிகையாளர் சங்கம், "ஆளுநரின் செயல் முன்னுதாரணமானதோ சகித்துக்கொள்ளக்கூடியதோ அல்ல. பெண் பத்திரிகையாளர்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கடந்தே பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் அரசியல் சாசனத்தின் தலைமையாக இருக்கக்கூடிய ஆளுநரே பெண் பத்திரிகையாளரிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்துக்கிறது. எனவே, ஆளுநராக நீங்கள் நடந்த செயலுக்கு மன்னிப்புக்கு கேட்க வேண்டும். அல்லது அடுத்தக் கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்" என தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்புகள் குவிந்த பின்னணியில் ஆளுநர் தன் பேத்தியைப் போல் நினைத்து தட்டியதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்புக் கோருவதாகவும் கடிதம் அனுப்பி உள்ளார். பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சிறப்பாக இருந்ததால் அதற்கு பாராட்டுத்தெரிவிக்கவே அவ்வாறு செய்ததாகவும் அவர் கூறி உள்ளார். ஆளுநரின் மன்னிப்பை ஏற்பதாகக் கூறி இருக்கும் பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியம் ஆளுநரின் மன்னிப்பை ஏற்பதாகவும் ஆனால் அவரது விளக்கம் சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...