???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பால் சிறு முதலீட்டுப் படங்கள் முடங்கும் அபாயம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   05 , 2017  08:13:46 IST


Andhimazhai Image

சென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு விதித்த கேளிக்கை வரியால், அக்டோபர் 6 முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.  சென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத வேற்று மொழித் திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்தது. கடந்த செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், மாநகராட்சியின் இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஏற்கனவே ஜி.எஸ்.டி, பைரஸி போன்ற பிரச்சனைகளால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து வரும் நிலையில் கூடுதல் கேளிக்கை வரி அவர்களை இன்னமும் பெருத்த நஷ்டத்தில் தள்ளும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் திரையரங்குக் கட்டணத்தை முறைப்படுத்தி அமைக்கவும், சமீபத்தில் விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை முற்றிலுமாக விலக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

 

ஆனால் இந்த அறிவிப்பால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட விழித்திரு, இங்கிலீஷ் படம் மாதிரியான சிறு முதலீட்டுப் படங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழித்திரு படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

 

‘’திடீரென அறிவித்த ஸ்டிரைக் காரணமாக உருவாகும் பொருளாதார நஷ்டத்தைப்பற்றி பேச தயாரிப்பாளர் சங்க கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்... படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சினையின் பொருட்டு இங்கு வருவது இதோடு சேர்த்து எத்தனையாவது முறை என்று நினைவில்லை.

படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடி கூட இத்தனை முறை அலைந்ததில்லை. சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து இயங்குவதுதான் பலம் ...அதுதான் ஆகப்பெரிய பலவீனமும். அறமற்ற சில மனிதர்களுடன் பழகுவதாலும் பணிபுரிவதாலும் மனம் மிகவும் களைப்படைகிறது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

 

இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராவிட்டால், அடுத்த வாரம் மற்றும் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட படங்களின் நிலைமை என்னாகும்? அப்படியே பிரச்சனை தீர்ந்தாலும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படங்களுக்கு மீண்டும் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இப்படி மீண்டும் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போவதால் சிறு முதலீட்டுப் படங்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளன என்பதில் சந்தேகமேயில்லை.

 

- சரோ லாமா -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...