???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் கடுமையாக உயரும்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   29 , 2017  01:26:54 IST

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கட்டணம் உயரும் என்று திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரி விதிப்பால் சினிமா துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்ப்போம்.

 

இதுவரை தமிழ்நாட்டில் ‘ஏ’ சான்றிதழ், ‘யு ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழ் படங்களுக்கும், இந்தி, ஆங்கில படங்களுக்கும் தியேட்டர்களில் 30 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. தமிழ் படங்கள் ‘யு’ சான்றிதழ் பெற்றால் வரி சலுகை உண்டு.

 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வந்தால் இந்த வரிச் சலுகை  இனி கிடைக்காது. எல்லா படங்களுக்கும் வரி விதிப்பதால் வரியுடன் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் சினிமா கட்டணம் உயரும்.

 

ஆரம்பத்தில் சினிமா டிக்கெட் அனைத்துக்கும் 28 சதவீதம் வரி என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு திரைப்படத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுக்கு 28 சதவீதமும், 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதமும் வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டால், சம்பளம் மற்றும் செலவுக்காக தயாரிப்பாளர் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் கூடுதல் செலவு ஆகும்.

 

இந்த செலவை சினிமா டிக்கெட் மூலம் சரி செய்வதற்காக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சுமை அதிகரிக்கிறது. படத் தயாரிப்பாளர்களை இந்த வரி விதிப்பு முறை பெரிதும் பாதிக்கும்.

 

இந்தி படங்கள் வெளியாகும் மாநிலங்களில் சினிமா டிக்கெட்டுக்கு 40 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கும் முறை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 30 சதவீதம், கேரளாவில் 15 சதவீதம், ஆந்திராவில் 12 சதவீதம் வரி உள்ளது. கர்நாடகத்தில் வரி இல்லை. ஆனால் இப்போது அனைத்து மாநில வரிகளையும் சராசரியாக்கி 28 சதவீதம், 18 சதவீதம் என சினிமா டிக்கெட்டுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைப்போல் வரி விலக்கு பெற்ற, குறைந்த வரி விதித்த மாநிலங்களில் டிக்கெட் விலை உயரும்.

 

இதுதவிர மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் சினிமாவுக்கு கேளிக்கை வரி விதிக்கலாம் என்று புதிய சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமா டிக்கெட் மேலும் உயரும். இதனால் திரைப்பட தொழில் முழுமையாக முடங்கும் நிலை உருவாகும்.

 

இன்னும் ஒரு மாதம் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குறைக்க முயற்சி செய்வோம். முடியவில்லை என்றால் தியேட்டர்களை மூடுவது தவிர வேறு வழி இருக்காது. முழுமையாக ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்படும் போது சினிமா தயாரிப்பு முடங்கும். எனவே இந்த பிரச்சினை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் திரைப்படத் துறையை காப்பாற்ற முடியாது என்பது கசப்பான உண்மை தான் போல..click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...