![]() |
இது என்ன மாயம்?-ஆங்கிலப்படத்தின் கதையா?Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12 , 2014 23:26:30 IST
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் இதுஎன்னமாயம்? என்று ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் விக்ரம்பிரபு ஒரு மேஜிக்நிபுணர் போல உடையணிந்திருந்தார். அதைப் பார்த்ததும் இது இந்த ஆங்கிலப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் என்கிற பேச்சு கிளம்பிவிட்டது. சிறந்த மேஜிக்நிபுணர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பயன்படுத்திப் பெரும்பொருள் சம்பாதிக்கும் படம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தது என்றும் அந்தக்கதையைச் சில மாற்றங்களுடன் தமிழ்நாட்டுக்கேற்ப உருவாக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஏ.எல்.விஜய்யின் கற்பனையில் உருவானது என்றும் முந்தைய படங்களைப் போல அவர் மீது எந்தப்பழியையும் யாராலும் சுமத்த முடி£யதென்றும் அவருடைய ஆதரவாளர்கள் சொல்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மேஜிக் கலைக்குப் பெரிய இடம் இல்லை. அதனால் அப்படிப்பட்ட ஒரு கலையை மையப்படுத்தி ஒருவர் கதை எழுதுவதென்பது இயல்பாக நடக்கக்கூடிய செயல் அல்ல இது நிச்சயம் திரைகடலோடி எடுக்கப்பட்ட கதைதான் என்றும் வாதம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஒருபடம் இன்னும் தொடங்கக்கூட இல்லை, ஒரேயொரு விளம்பர வடிவமைப்பை வைத்துக்கொண்டு இவ்வளவு விசயங்கள் பேசப்படுகின்றன என்பது ஆரோக்கியமான செயல் அல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதேசமயம் இதுபோன்ற பேச்சுகள் கிளம்புவதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய செயல்பாடுகள்தாம் என்பதால் இதைச் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
|
|