???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முருகதாஸ் தயாரிக்கும் படத்தின்பெயர் ஆதாமும்ஆப்பிள்களும்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   12 , 2014  23:25:54 IST

 

கத்தி கதைத்திருட்டுச் சிக்கலை ஒருவாறு முற்றாகச் சமாளித்துவிட்ட முருகதாஸ் அடுத்தடுத்த வேலைகளில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாராம். அவருடைய இயக்கத்தில் இந்திப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அவருடைய தயாரிப்பில் இரண்டுபடங்களைத் தொடங்கவிருக்கிறாராம். அதில் முதலிடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் படம் என்று சொல்கிறார்கள். அந்தப்படத்துக்குத்தான் ஆதாமும்ஆப்பிள்களும் என்று பெயரிட்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் ஆண்டரியா நாயகியாகவும் நடிக்கிறார்களாம். படத்தின் தலைப்பிலேயே உள்ளது போல இது காதல்கள் கதை. நாயகனின் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் அதனால் ஏற்படும் சுவாரசியமான சிக்கல்கள் என்று திரைக்கதையை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள். படத்துக்கு இசையமைக்க அனிருத்தை அணுகியிருப்பதாகவும் அவருடைய தேதிகள் காரணமாக அது முடிவாகாமல் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதென்றும் அப்போது முருகதாஸ் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. கத்தி சிக்கல் காரணமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருந்த அவர், இந்தப்படத்தைத் தொடங்கும் நேரத்தில் உள்ளே வருவார். அப்போது கத்தி உட்பட பழைய விசயங்கள் எதையும் கேட்காதீர்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்ளப்படும். அப்புறம் என்ன? எல்லாம் சுகம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...