???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிஷ்கின் பிடிவாதம்-தயாரிப்பாளர் வருத்தம்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   08 , 2014  01:04:42 IST

 
    பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு படத்தை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அந்தப்படத்தை இராமநாராயணனின் மகன் முரளி வாங்கி வெளியிடுகிறார். படத்தின் விளம்பரங்களுக்காக வடிவமைப்புச் செய்து மிஷ்கின் கொடுப்பவை எல்லாமே ஆங்கிலப்படங்களின் விளம்பரங்கள் போலவே இருக்கின்றனவாம். இந்த மாதிரி டிசைன் செய்தால் நம்ம மக்களுக்குச் சென்று சேராது. இந்தப்படத்தின் பெயருக்கு ஒரு வியாபாரமதிப்பு இருக்கிறது. அதை  விளம்பரங்களில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்த்தால்தான் மக்களைத் திரையரங்குகளுக்குள் கொண்டுவரமுடியும் என்று முரளி சொல்லியிருக்கிறார். ஆனால் அதை மிஷ்கின் ஏற்றுக்கொள்ளவில்லையாம். என் படங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. அதன்படிதான் டிசைன் செய்வேன் என்று சொன்னாராம். இந்தவிசயம் இயக்குநர் பாலாவின் காதுகளுக்குப் போயிருக்கிறது. முரளிக்கு இருக்கிற அனுப்வங்களைப் பாருங்கள், அவர் அண்மையில் வாங்கி வெளியிட்ட படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருக்கின்றன, அந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர் சொல்கிறார் அதைக் கேட்டுக்கொண்டால் உங்களுக்குத்தான் நல்லது என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் விளம்பர வடிவமைப்புகளை முரளி சொல்கிற மாதிரி மாற்றுவதற்கு மிஷ்கினின் ஈகோ இடம்கொடுக்க மறுக்கிறதாம். இதனால் வெற்றி பெறவேண்டிய ஒரு படத்துக்கு ஆட்களை வராமலே செய்துவிடுவார் போலிருக்கிறதே  என்று வருந்திக்கொண்டிருக்கிறாராம் முரளி.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...