???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திக்குப் போகிறார் ஞானவேல்ராஜா!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   20 , 2015  00:02:29 IST

தமிழில் புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் இந்திக்குப் போவதைப் பார்த்திருக்கிறோம். தயாரிப்புநிறுவனங்கள் பொதுவாக அப்படி யோசிப்பதில்லை. ஸ்டுடியோகிரின்ஞானவேல்ராஜா இப்போது நேரடியாக இந்தியில் ஒருபடத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறாராம். தமிழில் வெற்றி பெற்ற மங்காத்தா படத்தின் உரிமையை வாங்கி அதை இந்தியில் எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு இயக்குநரை இங்கிருந்தே அழைத்துச் செல்வதா அல்லது அங்கேயே ஒரு இயக்குநரை வைத்துக்கொள்வதா என்ற யோசனையில் இருக்கிறார்களாம். இயக்குநர் முடிவான் பின்பு நாயகன் யார் என்பதையும் முடிவு செய்வோம் என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் நாயகனை முடிவுசெய்துவிட்டுத்தான் இந்தவேலையிலேயே இறங்கியிருக்கிறார்கள். இப்போதைக்கு அதைப் படுரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்போது கொம்பன் ,மாஸ் ஆகிய படங்கள் தயாரிப்பில் இருப்பதால் இந்த நேரத்தில் இந்தியல் படம் தயாரிப்பதைப்பற்றிப் பேசவேண்டாம் என்று நினைத்து வெளியில் சொல்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் நேரடித்தாயரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அண்மையில் அவருடைய தயாரிப்பில் வெளியான டார்லிங் படத்தை அவருடன் இணைந்து தயாரித்தவர் தெலுங்குநடிகர் அல்லுஅர்ஜூன். அந்தப்படம் வெற்றி என்றவுடன் ஸ்டுடியோகிரின்நிறுவனத்தில் ஒருபடம் நடிக்கத் தேதி கொடுத்திருக்கிறாராம் அல்லுஅர்ஜூன். அவரை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளுக்கும் சேர்த்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறாராம் ஞானவேல்ராஜா. விரைவில் இவை பற்றிய அறிவிப்புகள் வரலாம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...