???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னை அறிந்தால் படத்தின் கதை சர்ச்சை!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   12 , 2014  23:25:16 IST

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் என்னைஅறிந்தால் படத்தின் கதையும் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் உடல்உறுப்புகளைத் திருடிவிற்கும் கூட்டத்தைக் கண்டுபிடிக்கிற அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறாராம். அஜித்தின் மனைவியிடமே அந்தக்கூட்டம் கைவரிசையைக் காட்டிவிடுகிறது. அதனால் அவர் மரணமடைகிறார். அதனால் அஜித் வெகுண்டெழுந்து அந்தக்கூட்டத்தைத் தேடுகிறார். அந்தக்கூட்டம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறதாம். அவர்களில் யாரையும் கண்டுபிடிக்கமுடியாத நிலை. அதனால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்தம் உள்ளவர்களைத்தான் அந்தக்கூட்டம் குறிவைக்கிறது என்பதைத் தெரிந்து அந்தவகை இரத்தத்தையுடைய அனுஷ்காவை தன்னுடன் வைத்துக்கொள்கிறாராம் அஜித். அதன்பின்னர் அவர் எதிரிகளை கண்டுபிடித்து ஒழிப்பார் என்பதெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக்கதையை சில ஆண்டுகளுக்கு முன்பாக கௌதம்மேனன் தயாரிப்பில் படம் இயக்கவேண்டும் என்று விருப்பப்பட்டு ஒரு உதவிஇயக்குநர் சொல்லியிருக்கிறார். கௌதம்மேனனின் உதவியாளராக இருந்து நடிகராகியிருக்கும் ஒருவரும் கௌதம்மேனனின் உதவியாராக இருந்து தயாரிப்புநிர்வாக வேலைகளைச் செய்யும் ஒரு பெண்மணியும் அந்தக்கதையைக் கேட்டார்களாம். அதன்பின்னர் அந்தப்படம் நடக்கவில்லை. அந்த உதவிஇயக்குநர் இப்போது இயக்குநராகிவிட்டராம். அவரும் இதே கதையை இன்னொரு நாயகனை வைத்துப் படமாக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கௌதம்மேனனிடம் கதை சொன்னதற்கான எவ்வித ஆதாரமும் இல்லாததால் அந்த இயக்குநர் இந்த விசயத்தை வெளியில் சொல்லக்கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பெரியநடிகர்கள் பெரியஇயக்குநர்கள் என எல்வோருமே இப்படி சர்ச்சையில் இறங்கினால் என்னாவது?



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...